தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப்பள்ளி ஒதுக்கீடுக்கு அனுமதி தராத ஆளுநர்: டிரெண்டிங்கில் அனல்

அரசுப்பள்ளி ஒதுக்கீடுக்கு அனுமதி தராத ஆளுநர்: டிரெண்டிங்கில் அனல்

அரசுப்பள்ளி ஒதுக்கீடுக்கு அனுமதி தராத ஆளுநர்: டிரெண்டிங்கில் அனல்


UPDATED : அக் 24, 2020 12:00 AM

ADDED : அக் 24, 2020 08:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2020 12:00 AM ADDED : அக் 24, 2020 08:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காததாக ஆளுநரை கண்டித்து டுவிட்டரில் #ஆளுநரின்_அNEETதி என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த கல்வியாண்டிலேயே இதை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். கல்வியாளர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார் என்று எதிர்க்கட்சி தலைவரான திமுக.,வின் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டி ஆளுநருக்கும் கடிதம் எழுதினார். ஆனால் மசோதாவிற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் இதை கண்டித்து திமுக., சார்பில் தமிழகம் முழுக்க இன்று(அக்., 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us