உறைவிடப் பள்ளிகள் அமைவிடம் அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை
உறைவிடப் பள்ளிகள் அமைவிடம் அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை
UPDATED : நவ 02, 2009 12:00 AM
ADDED : நவ 02, 2009 11:27 AM
"தேசிய இடைநிலைக் கல்வி(ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தின் கீழ் 44 வட்டாரங்களில் தலா 56.7 லட்சம் ரூபாய் மதிப்பில், 24.95 கோடி ரூபாயில், தமிழகத்தில் கே.ஜி.கே.வி., உறைவிடப் பள்ளி துவங்கப்பட உள்ளன. அதற்கான கட்டிடங்கள் வட்டாரத்தின் மையப்பகுதியில் அமைய வேண்டும்&' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல் பட்டு வருகிறது. தற்போது, ஒன்பது மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., வரை உள்ள பள்ளி மற்றும் கல்வித்தரத்தை மேம்படுத்த, தேசிய இடைநிலைக் கல்வி திட்டம் துவக்கப்பட உள்ளது. இத்திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், பெண் கல்வி சதவீதம் குறைவாகவும், பள்ளி இடைநிற்கும் மாணவிகளின் எண் ணிக்கை அதிகமாகவும் உள்ள வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில், கே.ஜி.பி.வி.,(கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா) எனும், உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், பள்ளியில் இடைநின்ற மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, எட்டாம் வகுப்பு தேர்வெழுத, இரண்டு ஆண்டு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளில், பலரும் மேற்கொண்டு படிக்க முடியாமல், படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். அவர்களுக்கு இடைநிலைக் கல்வியை உறுதிப்படுத்தும் விதமாக, தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தில், கே.ஜி. கே.வி.,(கஸ்தூரிபா காந்தி கன்னிகா வித்யாலயா) எனும், உண்டு உறைவிடப் பள் ளிகள் துவக்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெறும் வகையில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அதற்காக, தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 13 மாவட்டங்களில் இருந்து, 44 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளன. வட்டாரத்துக்கு, ஒரு கே.ஜி.கே.வி., உறைவிடப் பள்ளி வீதம் அமைக்கப்பட உள்ளது. இதில், தற்காலிகமாக செயல்படுவதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டன. இப்பள்ளிகள், இன்னும் ஓரிரு வாரங்களில் செயல்பட தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இம்மையங்களுக்கு, சொந்தக்கட்டடம் கட்டவும், தொடர்ந்து செயல்படுத்தவும், தலா 56.7 லட்சம் ரூபாய் வீதம் 24.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. "யூனியன் மையத்தில் உள்ளதாகவும், போக்குவரத்து வசதி அதிகமாக உள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டும்&' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
