தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெட் தேர்ச்சி பெற்றவர்கள் புறக்கணிப்பு

நெட் தேர்ச்சி பெற்றவர்கள் புறக்கணிப்பு

நெட் தேர்ச்சி பெற்றவர்கள் புறக்கணிப்பு


UPDATED : அக் 28, 2020 12:00 AM

ADDED : அக் 28, 2020 08:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2020 12:00 AM ADDED : அக் 28, 2020 08:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'அண்ணா பல்கலையில், பேராசிரியர் மற்றும் நுாலகர் பணிக்கு, &'நெட்&' தேர்ச்சி பெற்றவர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும்&' என, முதுநிலை பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, &'நெட், செட்&' சங்கம் சார்பில், அதன் செயலர் தங்க முனியாண்டி, அண்ணா பல்கலைக்கு அனுப்பியுள்ள கடிதம்:

அண்ணா பல்கலையில், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி நுாலகர், துணை நுாலகர், பல்கலை நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவிகளில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.
நியமிக்க வேண்டும் 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, அடிப்படை இளநிலை, முதுநிலை கல்வித் தகுதியில், 55 சதவீத தேர்ச்சியுடன், பிஎச்.டி., முடித்தவர்களாக இருப்பது கட்டாயம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவுப்படி, நெட் என்ற தேசிய தகுதித் தேர்வு முடித்தவர்களையே நியமிக்க வேண்டும்.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், லட்சக்கணக்கானோர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு பணி கிடைக்காத வகையில், பிஎச்.டி.,யை மட்டும் கட்டாயமாக்கி, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படிப்புக்கு, நெட் தகுதித் தேர்வு இல்லை என்பதால், பிஎச்.டி., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us