தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் நியமனம் ரத்து

கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் நியமனம் ரத்து

கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் நியமனம் ரத்து


UPDATED : அக் 30, 2020 12:00 AM

ADDED : அக் 30, 2020 07:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2020 12:00 AM ADDED : அக் 30, 2020 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கல்லுாரி கல்வி இயக்குனராக பூரணசந்திரனை நியமித்து உயர் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கல்லுாரி கல்வி இயக்குனராக டாக்டர் டி.பூரணசந்திரனை நியமித்து 2020 ஆகஸ்ட் 14ல் உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் கீதா தாக்கல் செய்த மனு:திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலை கல்லுாரியில் முதல்வர் அந்தஸ்தில் பணியாற்றுகிறேன். முதல்வர் அந்தஸ்தில் நான் சீனியராக இருப்பதால் கல்லுாரி கல்வி இயக்குனர் பதவிக்கான நியமனம் பெற எனக்கு உரிமை உள்ளது.
கடந்த 2019 மார்ச்சில் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தால் பூரணசந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. முதல் ஐந்து இடங்களில் அவர் இல்லை. இருந்தாலும் அவரை விட நான் சீனியர். எனக்கு பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும். எனவே கல்லுாரி கல்வி இயக்குனர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். கல்லுாரி கல்வி இயக்குனராக எனக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் உயர் கல்வித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தார். இதையடுத்து பிரதான மனுவை விசாரித்து நீதிபதி பார்த்திபன் பிறப்பித்த உத்தரவு:கல்லுாரி கல்வி இயக்குனராக பூரணசந்திரனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமல்ல; வேறு காரணங்களுக்காகவும் தெரிகிறது.
அவரை நியமித்ததில் பின்பற்றிய நடைமுறையில் குறைபாடுகள் உள்ளன. எனவே அவரது நியமனம் ரத்து செய்யப்படுகிறது.அதிகாரிகள் தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதில் கவனக்குறைவும் அலட்சிய போக்கும் நிலவுகிறது. இது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.விண்ணப்பதாரர்களின் தகுதியை ஆராய உரிய வழிமுறைகள் வகுக்கப்படவில்லை. எனவே நியாயமான நடைமுறையை அரசு வகுக்க வேண்டும்.
இதற்காக நிர்வாகத்தில் திறமை அனுபவம் வாய்ந்தவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை நியமித்து உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இதற்கான நடவடிக்கைகளை அரசு முடிக்க வேண்டும். உரிய வழிமுறைகள் வகுத்த பின் தகுதியானவர் களை கல்லுாரி கல்வி இயக்குனர் பதவிக்கு அரசு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us