தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்

உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்

உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்


UPDATED : அக் 31, 2020 12:00 AM

ADDED : அக் 31, 2020 06:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2020 12:00 AM ADDED : அக் 31, 2020 06:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி:
&'&'மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்&'&' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் பி.டி.அரசகுமார் உடன் வந்திருந்தனர்.
ஸ்டாலின் கூறியதாவது: 

&'&'மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு கவர்னரின் கையெழுத்து பெற காலம் கடத்தியதே முதல்வர் பழனிசாமியின் மோசமான ஆட்சிக்கு உதாரணம். இதை கண்டித்து தி.மு.க., சார்பில் போராட்டம் செய்தோம். அதற்கு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் என முதல்வர் கூறுகிறார். அரசியல் செய்யாமல் அவியல் செய்யவா முடியும் என கூறினேன். இப்போதும் அதுவே எனது பதில்.
மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டிற்கு அரசாணை பிறப்பித்துள்ளதை வரவேற்கிறேன். இதனை இவ்வாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டரீதியாக நீதிமன்றம் சென்றால் அரசாணை செல்லுபடியாகுமா என்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். அதேநேரம் எந்த வகையிலாவது அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசாணையை செயல்படுத்த வேண்டும்,&'&' இவ்வாறு ஸ்டாலின் கூறினார். முன்னதாக மதுரையில் தேவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us