UPDATED : அக் 31, 2020 12:00 AM
ADDED : அக் 31, 2020 06:56 PM
அ நிறம் | அளவு
ஈரோடு:
&'&'வரும் ஆண்டு, &'நீட்&' தேர்வுக்காக, 9,438 பேர் பதிவு செய்துள்ளனர்,&'&' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் கூறியதாவது:
மாணவர்களின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு, சட்டசபையில் இயற்றப்பட்ட, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு, முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார். &'நீட்&' தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், வரும் ஆண்டில் மீண்டும் நீட் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில், அரசு மூலம் வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சியில், இம்மாணவர்களும், தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் பதிவு செய்து வருகின்றனர்.இதுவரை, 9,438 மாணவர்கள் பதிவு செய்து, பயிற்சியை தொடர உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
