தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவ., 16 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி

நவ., 16 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி

நவ., 16 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி


UPDATED : அக் 31, 2020 12:00 AM

ADDED : அக் 31, 2020 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2020 12:00 AM ADDED : அக் 31, 2020 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று நிறைவடைந்த நிலையில் மேலும் தளர்வுகளுடன் நவ.30 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நவ. 16-முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக். 31 நள்ளிரவு 12:00 மணி வரை அமலில் இருக்கும் என கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அதன்படி ஊரடங்கு இன்று இரவு நிறைவடைகிறது.
ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் இன்று ஆலோசனை நடந்தது. 
அவர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில் தமிழக அரசு இன்று மேலும் சில தளர்வுகளுடன் நவ. 30 வரை ஊரடங்கை நீட்டித்து பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

* நவ. 16-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பள்ளிகள் திறக்க அனுமதி.
* நவ. 16 முதல் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவன விடுதிகள் திறக்க அனுமதி.
* பொழுது போக்கு பூங்காங்களும் திறக்க அனுமதி.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us