தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வத்சலா சேதுராமனுக்கு தமிழ் செம்மல் விருது

வத்சலா சேதுராமனுக்கு தமிழ் செம்மல் விருது

வத்சலா சேதுராமனுக்கு தமிழ் செம்மல் விருது


UPDATED : நவ 02, 2020 12:00 AM

ADDED : நவ 02, 2020 08:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2020 12:00 AM ADDED : நவ 02, 2020 08:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சிறந்த தமிழ் சேவைக்கான தமிழ் செம்மல் விருதுக்கு, தமிழறிஞர் வத்சலா சேதுராமன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் தனிநபர்களை அடையாளப்படுத்தி, கவுரவிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், ஒவ்வோர் ஆண்டும், தமிழ் செம்மல் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், 37 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வத்சலா சேதுராமன் உள்ளிட்ட, 16 பேருக்கு, நாளை காலை, சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தமிழ் செம்மல் விருதுகளை வழங்குகிறார். 
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, 55 வயதுக்கு மேற்பட்ட, மற்ற, 21 பேருக்கு, அவரவர் மாவட்டங்களில், மற்றொரு நாளில், அங்குள்ள அமைச்சர்களால் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us