தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., நுழைவுவாயில் திறக்க வழக்கு மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

ஐ.ஐ.டி., நுழைவுவாயில் திறக்க வழக்கு மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

ஐ.ஐ.டி., நுழைவுவாயில் திறக்க வழக்கு மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு


UPDATED : நவ 04, 2020 12:00 AM

ADDED : நவ 04, 2020 09:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2020 12:00 AM ADDED : நவ 04, 2020 09:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை, வேளச்சேரியில் மூடப்பட்ட நுழைவுவாயிலை திறக்க கோரும் மனுவை, நான்கு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி, ஐ.ஐ.டி., நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி.,க்கு, வேளச்சேரியில் நுழைவு வாயில் உள்ளது. ஐ.ஐ.டி., வளாகத்தில், இரண்டு பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள், வேளச்சேரி நுழைவு வாயிலை பயன்படுத்தி வருகின்றனர். 55 ஆண்டுகளாக திறந்திருந்த நுழைவு வாயில், தற்போது மூடப்பட்டுள்ளது.
நுழைவுவாயிலை திறக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹரி கிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தியாகராஜன் ஆஜராகி, &'&'நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளதால், ௫ கி.மீ., சுற்றி, ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வர வேண்டியுள்ளது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்,&'&' என்றார்.
ஐ.ஐ.டி., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திக் ராஜன், &'&'மாணவர்களிடம் இருந்து, எந்த புகாரும் வரவில்லை. நுழைவு வாயில் அருகில், மாணவியர் விடுதி உள்ளது. அவர்களின் பாதுகாப்பு கருதி, நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது,&'&' என்றார். இதையடுத்து, நுழைவுவாயிலை திறக்கக்கோரி, எம்.பி., - மத்திய அமைச்சர், ஜனாதிபதி வரை மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., நிர்வாகத்துக்கு ஒரு மனு கூட அனுப்பவில்லை என்ற நீதிபதிகள், இரண்டு வாரங்களில், ஆவணங்கள், புகைப்படங்களுடன், ஐ.ஐ.டி., நிர்வாகத்துக்கு மனு அளிக்கவும், அதை, நான்கு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us