தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் மூலம் சி.ஏ., தேர்வு சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

ஆன்லைன் மூலம் சி.ஏ., தேர்வு சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

ஆன்லைன் மூலம் சி.ஏ., தேர்வு சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி


UPDATED : நவ 05, 2020 12:00 AM

ADDED : நவ 05, 2020 09:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2020 12:00 AM ADDED : நவ 05, 2020 09:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ஐ.சி.ஏ.ஐ., எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர் மையம், சி.ஏ., தேர்வை, &'ஆன்லைன்&' மூலம் நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
கொரோனா காரணமாக, கடந்த மே மாதம் நடத்த வேண்டிய, சி.ஏ., தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, வரும், 21 முதல் டிச., 14 வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. சாத்தியம் இல்லைகொரோனா காரணமாக கல்வி மையங்களில், 100 பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற, மத்திய அரசின் உத்தரவை, இத்தேர்வு மீறுவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில், சில மாணவர்களின் பெற்றோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கொரோனா பரவல் உள்ள சூழலில், மாணவர்கள் நலன் காக்க, ஐ.சி.ஏ.ஐ., எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த மனு, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, ஐ.சி.ஏ.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராம்ஜி சீனிவாசன் கூறியதாவது:

சி.ஏ., எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வு, கேள்விகளுக்கு, &'சரி&' அல்லது &'தவறு&' என்பதை மட்டும் குறிக்கச் சொல்லும், இதர தேர்வுகளில் இருந்து மாறுபட்டது.இத்தேர்வில் மாணவர்கள் விரிவான விடை அளிக்க வேண்டியது அவசியம். அதனால், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த முடியாது.
நேரடி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிட வசதிகளை செய்து தருமாறு மனுதாரர் கோரியுள்ளார். அதுவும் சாத்தியம் இல்லாதது.எனினும், ஓட்டல் அறைகளை பதிவு செய்ய, மாணவர்களுக்கு மின்னணு அனுமதி அட்டை வழங்க அனுமதிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை

இதையடுத்து, மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து, அமர்வு பிறப்பித்த தீர்ப்பு:ஆன்லைன் தேர்வு சாத்தியமில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கடந்த காலங்களில் தேர்வுகள் நல்லமுறையில் நடைபெற்றுள்ளன.எனினும், மனுதாரர்கள் தெரிவித்த குறைகளை, ஐ.சி.ஏ.ஐ., வலைதளத்தில் பதிவு செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us