தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் திறப்புக்கான கருத்து கேட்பு கூட்டம்: வழிமுறைகள் வெளியீடு

பள்ளிகள் திறப்புக்கான கருத்து கேட்பு கூட்டம்: வழிமுறைகள் வெளியீடு

பள்ளிகள் திறப்புக்கான கருத்து கேட்பு கூட்டம்: வழிமுறைகள் வெளியீடு


UPDATED : நவ 07, 2020 12:00 AM

ADDED : நவ 07, 2020 09:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2020 12:00 AM ADDED : நவ 07, 2020 09:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:

பள்ளிகளை திறப்பது குறித்து, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், வரும், 9ம் தேதியன்று, கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.
நெறிமுறைகள்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம், கருத்துக்கள் பெறப்படும். இந்த கூட்டம், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில், காலை, 10:00 மணிக்கு நடத்தப்படும். மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில், அதிக பெற்றோர் வரும் வாய்ப்புள்ளதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஒரே நாளில் இடைவெளி விட்டு, வெவ்வேறு நேரங்களில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, கூட்டம் நடத்த வேண்டும்.
கையொப்பம்

தலைமை ஆசிரியரே, அனைத்து வகுப்புகளுக்கும் கூட்டம் நடத்த முடியாது என்பதால், உதவி தலைமை ஆசிரியர்களை வைத்தும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். கூட்டத்தில் ஏகமனதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை தொகுத்து, அவற்றில், தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர், பள்ளி முதல்வர்கள் மற்றும் பெற்றோரின் கையொப்பம் பெற்று, முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு வழிமுறைகள், சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
கல்லுாரிகள் திறப்புக்கும் கருத்து கேட்க முடிவு

கல்லுாரி மற்றும் பல்கலைகளை திறப்பது குறித்து, கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களின் கருத்துகளை பெற, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து, வரும், ௯ம் தேதி, பெற்றோரின் கருத்துகளை கேட்கும் கூட்டத்தை, பள்ளி கல்வித் துறை நடத்துகிறது. அதேபோல, கல்லுாரி மற்றும் பல்கலைகளை திறந்து வகுப்புகள் நடத்துவது குறித்தும், கருத்துகளை கேட்க, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக, பல்கலைகளின் துணைவேந்தர்கள், கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களிடம், &'ஆன்லைன்&' வழி கூட்டங்களில், கருத்துகளை பெற, உயர் கல்வித் துறை ஆலோசனை நடத்தியுள்ளதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. &'&'பள்ளிகள் திறப்பு குறித்து, வரும், 9ல் நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில், பெற்றோர் தங்கள் கருத்துகளை, வெளிப்படையாக தெரிவிக்கலாம்,&'&' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அவர் கூறியதாவது:

ஆந்திராவில் பள்ளிகளை திறந்ததால், அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதனால், ஆந்திராவையோ, கேரளா மாநிலத்தையோ, தமிழகம் கவனிக்கிறது என்பதாக அர்த்தம் அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் நிலைப்பாடு என்பது வேறு. பெற்றோரையும், மாணவரையும் கவனிக்கும் அரசு என்ற முறையில், முதல்வரின் ஆலோசனைப்படி, பள்ளிகள் திறப்பு குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக, வரும், 9ல் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில், ஒட்டுமொத்த பெற்றோர் தெரிவிக்கும் கருத்துக்கள், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். பள்ளி திறப்பு குறித்து, பெற்றோர், தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கலாம். கூட்டத்துக்கு வர இயலாதவர்கள், கடிதம் மூலமாக கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us