தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பில் சலுகைகள் கட்டுப்படுத்த ஐகோர்ட் உத்தரவு

வேலைவாய்ப்பில் சலுகைகள் கட்டுப்படுத்த ஐகோர்ட் உத்தரவு

வேலைவாய்ப்பில் சலுகைகள் கட்டுப்படுத்த ஐகோர்ட் உத்தரவு


UPDATED : நவ 09, 2020 12:00 AM

ADDED : நவ 09, 2020 12:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2020 12:00 AM ADDED : நவ 09, 2020 12:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டம், முத்து தாக்கல் செய்த மனு:பொது பயன்பாட்டிற்காக, எங்கள் நிலத்தை, தமிழக அரசு கையகப்படுத்தியது. இதற்காக, பொது வேலைவாய்ப்பில், என் மகனுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான சான்று கோரி, சிவகங்கை கலெக்டர், ஆர்.டி.ஓ.,விடம் விண்ணப்பித்தேன். ஆர்.டி.ஓ., நிராகரித்தார். அதை ரத்து செய்து, சான்று வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, முத்து குறிப்பிட்டார். நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். 
முன்னுரிமை

அரசுத் தரப்பு, &'மனுதாரர் நிலத்தை, அரசுக்கு விற்பனை செய்துள்ளார். அதற்காக, அரசிடம், 63 ஆயிரத்து 360 ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். இதனால், வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்கான சான்று கோர முடியாது&' என தெரிவித்தது. 
நீதிபதி உத்தரவு:

மனுதாரர், விருப்பத்துடன் அரசுக்கு நிலத்தை விற்றுள்ளார். இதனால், வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கேள்வி எழாது. பொது வேலைவாய்ப்பில் முன்னுரிமை சலுகை வழங்கப்படுகிறது. இதை உரிமையாகக் கோர முடியாது. அரசியலமைப்புச் சட்டப்படி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும். 
சலுகைகளால் ஏழைகள், நலிந்த பிரிவினரின் உரிமைகள் பாதிக்கப்படும். தகுதியானவர்களின் உரிமையை பாதுகாக்க, அரசு வேலைக்காக, ஏக்கத்துடன் காத்திருப்போர் மற்றும் ஏழைகள், சமூகத்தில் பின்தங்கியோரின் நலனை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பு நடைமுறையில், சலுகை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும்.

எச்சரிக்கை

இடஒதுக்கீடு விதிகள்படி, அனைத்துப் பிரிவினருக்கும் சமவாய்ப்பு அளிக்க சலுகை, முன்னுரிமை, சிறப்புத் திட்டங்கள் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதில், அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us