தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு; கவர்னருடன் சந்திப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு; கவர்னருடன் சந்திப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு; கவர்னருடன் சந்திப்பு


UPDATED : நவ 11, 2020 12:00 AM

ADDED : நவ 11, 2020 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2020 12:00 AM ADDED : நவ 11, 2020 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மருத்துவக் கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தர மறுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு கோப்பை அனுப்பி உள்ளார். இந்நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நேற்று, கவர்னர் கிரண்பேடியை சந்தித்து பேசினர். 
அப்போது, அரசு பள்ளியில் மாநில பாட திட்டத்தில் பயிலும் ஏழை மாணவர்கள், சி.பி.எஸ்.சி., பாட திட்டத்தில் பயிலும் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட முடியாது. சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிலவும் முடியாது. ஆதலால், தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க ஆவணம் செய்ய வேண்டி மனு கொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us