தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/34 பணியிடத்துக்கு, 626 பேர் போட்டா போட்டி

34 பணியிடத்துக்கு, 626 பேர் போட்டா போட்டி

34 பணியிடத்துக்கு, 626 பேர் போட்டா போட்டி


UPDATED : நவ 11, 2020 12:00 AM

ADDED : நவ 11, 2020 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2020 12:00 AM ADDED : நவ 11, 2020 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளின், 34 சமையலர் பணியிடத்தை நிரப்ப, 626 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில், திருப்பூரில், 25 மாணவர், மாணவியர் நலவிடுதிகள் இயங்குகின்றன. இவற்றில், காலியாக உள்ள, சமையலர் பணியிடத்தை நிரப்ப, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், 700க்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், 315 ஆண்கள்; 311 பெண்கள் என, 626 பேருக்கு, நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அலுவலகத்தில் நேற்று, சமையலர் பணிக்கான நேர்காணல் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி, கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலர் சையது அப்துல் பாரி, கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர் அமீர்பாஷா ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
நேர்காணலுக்கு வந்தவர்கள், உடல் வெப்பநிலை பரிசோதித்து, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பங்கேற்றவர்களில் பெரும்பாலோனோர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக அதிகாரிகள் கூறுகையில், &'மாவட்டத்தில், 18 ஆண் சமையலர்; 16 பெண் சமையலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அதற்காக, 311 பெண், 315 ஆண்களுக்கு, நான்கு நாட்கள் நேர்காணல் நடத்தப்படுகிறது.அதாவது, 626 நபர்களுக்கு நேர்காணல் நடத்தி, தகுதியான, 34 பேர் தேர்வு செய்து, நியமனம் செய்யப்படுவர்,&' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us