தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு: தமிழக அரசு

பள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு: தமிழக அரசு

பள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு: தமிழக அரசு


UPDATED : நவ 11, 2020 12:00 AM

ADDED : நவ 11, 2020 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2020 12:00 AM ADDED : நவ 11, 2020 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
பள்ளி, கல்லூரிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. நவ.,9 ல் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகளை கேட்டது குறிப்பிடத்தக்கது.
வரும் நவ.16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளி, கல்லூரிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், டிச.,க்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம். இது நீதிமன்றத்தின் கருத்து. அரசு சிறந்த முடிவெடுக்கும் என நம்புகிறோம். பள்ளிகள் திறக்கப்பட்டு, குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அதிக சிரமத்தை ஏற்படுத்தும். ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us