நெல்லை பல்கலை பாடத்தில் இருந்து எழுத்தாளர் அருந்ததிராய் கட்டுரை நீக்கம்
நெல்லை பல்கலை பாடத்தில் இருந்து எழுத்தாளர் அருந்ததிராய் கட்டுரை நீக்கம்
UPDATED : நவ 12, 2020 12:00 AM
ADDED : நவ 12, 2020 04:10 PM
திருநெல்வேலி:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்படுவதாக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் எம்.ஏ.,ஆங்கிலம் முதுகலைப்படிப்பில் 3வது செமஸ்டரில் commen wealth பாடப்பிரிவில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய walking with the comrades என்னும் கட்டுரை உள்ளது. 2017 முதல் இப்பாடம் உள்ளது. இதற்கு மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) எதிர்ப்பு தெரிவித்தது. மாநில இணை செயலாளர் விக்னேஷ் தலைமையில் ஏபிவிபி அமைப்பினர் அண்மையில் துணைவேந்தர் பிச்சுமணியை சந்தித்து அப்பாடப்பிரிவை நீக்குமாறு கோரிக்கை அளித்தனர்.
பல்கலையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அப்பாடப்பிரிவை நீக்குவதாகவும் அதற்கு பதிலாக கிருஷ்ணன் எழுதிய nature land என்ற கட்டுரை இடம்பெறுவதாகவும் துணைவேந்தர் அறிவித்துள்ளார். இதனை ஏபிவிபி உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்றுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளாக மாவோயிஸ்ட்கள், நக்சல்கள் குறித்த பாடம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது வருத்தமானதாகும். அதனை நீக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். தற்போது நீக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம் என்றார் விக்னேஷ்.
அதற்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், ‛ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்துவிடும்&' என தெரிவித்துள்ளார்.
