UPDATED : நவ 15, 2020 12:00 AM
ADDED : நவ 15, 2020 11:11 PM
கோவை:
கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகள் ஐந்து பேருக்கு, தேசிய நீர் விருதை மத்திய நீர்வள அமைச்சகம் வழங்கியுள்ளது.
மத்திய நீர்வள அமைச்சகம், 2019-க்கான தேசிய நீர் விருது வழங்கும் விழாவை டில்லியில் நடத்தியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்ற இவ்விழாவில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா ஆகியோர், தேசிய நீர் விருதை, கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளான ஹரி, புத்திர பிரதாப், முரளி, ரமேஷ்சுந்தர், சிங்காரவேலு ஆகியோருக்கு காணொலி வாயிலாக வழங்கினர். விருதுடன் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
&'மண் ஈரப்பதங் காட்டி&' கருவி கண்டுபிடித்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. &'&'விவசாய நிலத்தில் நீர்கட்டுதல், நீர் பாய்ச்சாமல் இருப்பது ஆகியவற்றை முடிவெடுப்பதில் இக்கருவி உதவி புரியும்,&'&' என, கோவை கரும்பு இனப்பெருக்கு நிலைய முதன்மை விஞ்ஞானி ஹரி கூறினார்.
இக்கருவியில் மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து, வெவ்வேறு வண்ணங்களில் விளக்குகள் ஒளிரும். ஒளிரக்கூடிய வண்ணங்களின் மூலம் விவசாயிகள் நீர் கட்டுவதா, வேண்டாமா என முடிவு செய்து கொள்ளலாம்.இக்கருவியை பயன்படுத்தி நீர் பாய்ச்சப்பட்ட கரும்பு வயலில் ஏக்கருக்கு 60.4 டன் மகசூலும், பயன்படுத்தாத வயலில் 55.8 டன் மகசூலும் கிடைத்துள்ளது. இக்கருவியின் விலை தற்போது 1,500 ரூபாய்.
இது குறித்த விபரங்களை http://sugarcane.icar.gov.in மற்றும் http://caneinfo.icar.gov.in என்ற இணைய தள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
