தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இதய மருத்துவராக விருப்பம்: முதலிடம் பிடித்த மாணவர் பேட்டி

இதய மருத்துவராக விருப்பம்: முதலிடம் பிடித்த மாணவர் பேட்டி

இதய மருத்துவராக விருப்பம்: முதலிடம் பிடித்த மாணவர் பேட்டி


UPDATED : நவ 17, 2020 12:00 AM

ADDED : நவ 17, 2020 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2020 12:00 AM ADDED : நவ 17, 2020 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
&'&'இதய மருத்துவராகி, தமிழகத்தில் சேவை செய்ய விரும்புகிறேன்,&'&' என, மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியலில், முதலிடம் பிடித்த, மாணவர் ஸ்ரீஜன் கூறினார்.
&'நீட்&' தேர்வில், நாமக்கல் கிரீன் பார்க் பயிற்சி மையத்தில் படித்த, திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன், 19, என்பவர், 720 மதிப்பெண்ணுக்கு, 710 மதிப்பெண் பெற்று, நேற்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில், முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்த்தேன். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் - ஜிப்மர் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதய மருத்துவராகி, தமிழகத்தில் சேவை செய்ய விரும்புகிறேன். &'நீட்&' தேர்வுக்காக தங்களை தயார்படுத்துபவர்கள், கடினமாக படிப்பதுடன், விரும்பி படிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், வெற்றி நிச்சயம். இவ்வாறு, அவர் கூறினார். 
மாணவரின் தந்தை ராஜவேல், நுாற்பாலை நடத்தி வருகிறார். தாயார் கனிமொழி, தம்பி அகிலேஷ் உள்ளனர். நரம்பியல் நிபுணர்&'நீட்&' தேர்வில், நாமக்கல் கிரீன்பார்க் பயிற்சி மையத்தில் படித்த மற்றொரு மாணவி மோகன பிரபா, 18, என்பவர், 720க்கு, 705 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ தரவரிசை பட்டியலில், மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து உள்ளார்.
இது குறித்து, மோகன பிரபா கூறியதாவது:

&'நீட்&' தேர்விலும், தற்போதைய தரவரிசை பட்டியலிலும், மாநில அளவில், இரண்டாமிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. நான் முன்பு கூறியது போல், எதிர்காலத்தில், நரம்பியல் நிபுணராகி, மக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு, அவர் கூறினார். மோகன பிரபாவின் தந்தை ரவிச்சந்திரனும், தாயார் சுமித்ராவும், பெங்களூருவில், கணினி பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us