தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்நாடு வேளாண் பல்கலை கலந்தாய்வு 26ல் துவக்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை கலந்தாய்வு 26ல் துவக்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை கலந்தாய்வு 26ல் துவக்கம்


UPDATED : நவ 20, 2020 12:00 AM

ADDED : நவ 20, 2020 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2020 12:00 AM ADDED : நவ 20, 2020 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை பிரிவு தலைவர் கல்யாணசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:

நடப்பாண்டு இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு வரும், 26 முதல் 28 வரை நடக்கிறது. வரும், 30 மற்றும் டிச., 1ல் தொழில்முறைக்கல்வி பாடப்பிரிவுகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு நடக்கிறது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு, டிச., 2ல் இணைய தளம் வாயிலாக அறிவிக்கப்படும். அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், &'இ - மெயில்&' மற்றும் மொபைல் எண் வாயிலாக தெரிவிக்கப்படும்.டிச., 7 முதல், டிச., 12 வரை ஆறு நாட்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்காக, ஒவ்வொரு நாளும், 600 மாணவர்கள் அழைக்கப்படுவர். சரிபார்ப்புக்கு பின், தற்காலிக இட ஒதுக்கீட்டுக்கு கடிதம் வழங்கப்படும்.
பட்டயப்படிப்பிற்கான நேரடி கலந்தாய்வு, டிச., 3 முதல் டிச., 6 வரை, நான்கு நாட்கள் நடத்தப் படும். பட்டப்படிப்பில் பொதுப்பிரிவு மற்றும் சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பட்டயப்படிப்பு கலந்தாய்வு குறித்த அனைத்து விபரங்களையும், https://tnauonline.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us