தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு போராட்டம்

துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு போராட்டம்

துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு போராட்டம்


UPDATED : நவ 21, 2020 12:00 AM

ADDED : நவ 21, 2020 07:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2020 12:00 AM ADDED : நவ 21, 2020 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அண்ணா பல்கலை முன் போராட்டம் நடந்தது.
இந்நிலையில் துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிரான புகார்கள் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதன் உண்மை தன்மை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்த உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணைக்கு அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல மாணவர்கள் தரப்பிலும் சுரப்பாவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
அரசின் விசாரணையை ரத்து செய்யக்கோரி நேற்று பல்கலையின் வாயிலில் மாணவர்களும் பேராசிரியர்களும் போராட்டம் நடத்தினர். அதேநேரம் துணைவேந்தர் சுரப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் காந்திமண்டபம் அருகே போராட்டம் நடந்தது. இரண்டு போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்காத நிலையில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் போலீசார் பாதுகாப்பளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us