9 மாத இடைவெளிக்கு பின் கல்லுாரிகள் மீண்டும் திறப்பு
9 மாத இடைவெளிக்கு பின் கல்லுாரிகள் மீண்டும் திறப்பு
UPDATED : டிச 03, 2020 12:00 AM
ADDED : டிச 03, 2020 08:50 AM
சென்னை:
ஒன்பது மாத இடைவெளிக்கு பின், அறிவியல், தொழில்நுட்ப கல்லுாரிகள், திறக்கப் பட்டன.
தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக, மார்ச்சில் ஊரடங்கு அமலானது. அதற்கு முன்பே, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசின் உத்தரவுப்படி, கல்லுாரிகளில் இறுதியாண்டு படித்தோர் தவிர, மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, புதிய கல்வி ஆண்டில், &'ஆன்லைன்&' வழி வகுப்புகள் நடத்தப்பட்டன. நேரடி வகுப்புகள் நடக்காத நிலையில், நேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் திறக்கப்பட்டன. முதுநிலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும்,நேற்று வகுப்புகள் துவங்கின.
கல்லுாரிகளுக்குள் மாணவர்கள் நுழையும் போது, அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்க பட்டு, சராசரி வெப்பநிலை உள்ளவர்கள் மட்டுமே, கல்லுாரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மாணவர்களும், முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது. அதேபோல, கல்லுாரி வாயில்களில், &'சானிடைசர்&'வைக்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. வகுப்பறைகளில், சமூக இடைவெளியுடன் அமர, இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அரசு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த நிலை தொடரும் என, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
