தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டு படிப்பு

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டு படிப்பு

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டு படிப்பு


UPDATED : டிச 06, 2020 12:00 AM

ADDED : டிச 07, 2020 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2020 12:00 AM ADDED : டிச 07, 2020 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஓராண்டுக்கான கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் வகுப்புக்கான, விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுனத்தில், அடுத்த கல்வியாண்டுக்கான, ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் அகழாய்வுக்கான பட்டய வகுப்பு, ஜனவரியில் துவங்க உள்ளது.இதில், தொல்லியல், தமிழக வரலாற்று, பண்பாடு, கலை, இலக்கியம், கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த வகுப்புகள், ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும். பத்தாம் வகுப்பு தேர்சி பெற்ற, தொல்லியல் துறையின் மீது ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, www.ulakaththamizh.in என்ற, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கலாம். சேர்க்கைக் கட்டணம், 2,500 ரூபாய்; வயது வரம்பு கிடையாது. விண்ணப்பங்களை, இம்மாதம், 28ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். 
மேலும் தகவலுக்கு, 044- 2254 2992, 95000 12272 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us