UPDATED : டிச 11, 2020 12:00 AM
ADDED : டிச 11, 2020 01:14 PM
மத்திய கல்வி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரமேஷ் பொக்ரியால், மாணவர்களுடன், &'வீடியோ கான்பரன்ஸ்&' வாயிலாக பேசினார். அப்போது, மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
அடுத்த ஆண்டு, மருத்துவ படிப்பிற்கான, &'நீட்&' நுழைவுத் தேர்வு, திட்டமிட்டபடி நடக்கும்; அதை ரத்து செய்யும் திட்டம் இல்லை. தேசிய தேர்வு அமைப்பு, &'நீட் மற்றும் பொறியியல் படிப்பிற்கான, ஜே.இ.இ., தேர்வுகளை சிறப்பாக நடத்துகிறது. இந்த தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தேர்தல் ஆணையம், தேர்தல் நாளை நிர்ணயிக்கிறது.
ஜே.இ.இ., தேர்வுகள், தற்போது ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகின்றன; இதை, மூன்று அல்லது நான்கு முறை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள, சி.பி.எஸ்.இ., தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். கொரோனாவால் கல்வி மையங்கள் மூடப்பட்டு, &'ஆன்லைன்&' வகுப்புகள் நடத்தப்படுவதால், இறுதி தேர்வுக்கு, 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு நீக்கப்பட்ட பாடங்கள் குறித்த விபரங்களை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். மாணவர்களும், பெற்றோரும், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பதில் அளித்தார்.
