தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/44வது புத்தக கண்காட்சி பிப்ரவரியில் நடத்த முடிவு

44வது புத்தக கண்காட்சி பிப்ரவரியில் நடத்த முடிவு

44வது புத்தக கண்காட்சி பிப்ரவரியில் நடத்த முடிவு


UPDATED : டிச 11, 2020 12:00 AM

ADDED : டிச 11, 2020 01:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2020 12:00 AM ADDED : டிச 11, 2020 01:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கச் செயலர் முருகன் கூறியதாவது:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும்பதிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்,நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.அதில், புத்தகக் கண்காட்சி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து, செயற்குழு உறுப்பினர்கள் பேசினர். பொதுக்குழு உறுப்பினர்களும், புத்தகக் கண்காட்சிக்கு ஆதரவளித்துள்ளனர்.
இந்தாண்டின் துவக்கத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், கொரோனா ஊரடங்கால் விற்பனை யாகாமல் உள்ளன.கொரோனா ஊரடங்கின் போது, பதிப்பகங்களைச் சார்ந்தோர், வேலை மற்றும் பொருளாதார இழப்பைச் சந்தித்தனர்.அதேபோல, இந்தாண்டு மார்ச் முதல் நவம்பர் வரை, எழுத்தாளர்களில் பெரும்பாலானோர், தங்களின் வீடுகளில் இருந்தனர். அவர்கள் நிறைய படித்தும், எழுதியும் வந்துள்ளனர்.
இந்த கொரோனா ஊரடங்கு, உலகத்தின் மீதான பார்வையையும், மனித வாழ்க்கை குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளது. அதனால், இந்தாண்டு, நிறைய புதிய சிந்தனைகளுடன் புதிய படைப்புகள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றை பதிப்பித்து வெளியிட வேண்டிய அவசியம், பதிப்பகங்களுக்கு ஏற்பட்டுள்ளது.இந்தாண்டு சென்னையில் நடக்க வேண்டிய மார்கழி இசை, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளுக்கு, வெளிநாட்டு தமிழர்கள் வர முடியாத நிலை உள்ளது.
கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியிருந்த வாசகர்களுக்கு, புத்தகதிருவிழா தான் ஊக்க விழாவாக அமையும்.எனவே, அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் நிலைமை சீராகும் என்பதாலும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவிக்கும் என்பதாலும், அப்போது, தீவுத்திடலில் புத்தகக் கண்காட்சியை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
புத்தகக் கண்காட்சிக்குத்தேவையான இடவசதியுடன், கடந்தாண்டு அறிவித்த, 75 லட்சம் ரூபாயையும், முதல்வர் வழங்கி உதவுவார் என, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் எதிர்பார்ப்பில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us