தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில ஒதுக்கீட்டிற்கு 161 மருத்துவ இடங்கள்

மாநில ஒதுக்கீட்டிற்கு 161 மருத்துவ இடங்கள்

மாநில ஒதுக்கீட்டிற்கு 161 மருத்துவ இடங்கள்


UPDATED : டிச 11, 2020 12:00 AM

ADDED : டிச 11, 2020 01:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2020 12:00 AM ADDED : டிச 11, 2020 01:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மொத்த இடங்களில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரப்படுகின்றன. அதன்படி, 2020 - 21ம் கல்வியாண்டில், 26 மருத்துவ கல்லுாரிகளில் இருந்து, 551 எம்.பி.பி.எஸ்., மற்றும் இரண்டு பல் மருத்துவ கல்லுாரிகளில் இருந்து, 29 பி.டி.எஸ்., என, 580 இடங்கள் சென்றன. அகில இந்திய மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற, 419 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மட்டுமே நிரம்பின. அதில், 132 எம்.பி.பி.எஸ்., மற்றும் 29 பி.டி.எஸ்., என, 161 இடங்கள் நிரம்பாமல், தமிழக ஒதுக்கீட்டிற்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் திரும்ப கிடைத்து இருப்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வாயிலாக, காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:

அரசு பள்ளி மாணவர்களுக் கான ஒதுக்கீட்டில், ஆறு பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பாமல் உள்ளன. தற்போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் திரும்ப கிடைத்துள்ளன. இதன் வாயிலாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கும் என்பது, பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us