தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2021 ஆண்டு முதல் 4 முறை ஜே.இ.இ., தேர்வு

2021 ஆண்டு முதல் 4 முறை ஜே.இ.இ., தேர்வு

2021 ஆண்டு முதல் 4 முறை ஜே.இ.இ., தேர்வு


UPDATED : டிச 18, 2020 12:00 AM

ADDED : டிச 18, 2020 07:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2020 12:00 AM ADDED : டிச 18, 2020 07:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
அடுத்த ஆண்டு முதல், ஆண்டுதோறும், நான்கு முறை, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு நடத்தப்படும், என, மத்திய கல்வி அமைச்சரான, பா.ஜ.,வை சேர்ந்த ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார்.
தேசிய தேர்வு முகமை, &'நீட்&' மற்றும் பொறியியல் படிப்பிற்கான, ஜே.இ.இ., தேர்வுகளை நடத்துகிறது. இதில், ஜே.இ.இ., தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது இனி, ஆண்டுக்கு நான்கு முறை நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டில்லியில் அவர் கூறியதாவது:

அடுத்த ஆண்டு முதல், ஜே.இ.இ., தேர்வுகளை நான்கு முறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி, 23 - 26ம் தேதி வரை நடத்தப்படும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், அடுத்தடுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள், தேர்வு முடிந்து ஐந்து நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் இருந்து தலா, 30 கேள்விகள் கேட்கப்படும். இதில், தலா, 25 கேள்விகள் என, 75 கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளித்தால் போதும். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியா - பிரிட்டன் கூட்டுக்குழு

ஐரோப்பிய நாடான பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப், டில்லி வந்துள்ளார். அவரை, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நேற்று சந்தித்தார். அப்போது, உயர் கல்வித்துறையில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. இரு நாடுகளையும் சேர்ந்த உயர் கல்வி அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, இரு நாடுகளின் உயர் கல்விகளை அங்கீகரிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us