தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., - எம்.எட்., தேர்வு துவக்கம்

பி.எட்., - எம்.எட்., தேர்வு துவக்கம்

பி.எட்., - எம்.எட்., தேர்வு துவக்கம்


UPDATED : டிச 18, 2020 12:00 AM

ADDED : டிச 18, 2020 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2020 12:00 AM ADDED : டிச 18, 2020 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பி.எட்., - எம்.எட்., செமஸ்டர் தேர்வுகள், துவங்கின. வீட்டில் இருந்து தேர்வை எழுதி, விடைத்தாளை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பிரச்னையால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், இறுதியாண்டுக்கு மட்டும், ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டு, சில தினங்களுக்கு முன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழி தேர்வுகள் துவங்கின. கல்லுாரிகள் துவங்கிவிட்டாலும், மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வை எழுதி, அதை ஆன்லைன் வழியே கல்லுாரிகளுக்கு அனுப்ப வேண்டும்என, பல்கலை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 23ம் தேதி வரை, இந்த தேர்வு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us