தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/31 மொழிகளை ஈன்ற தாய் தமிழ்

31 மொழிகளை ஈன்ற தாய் தமிழ்

31 மொழிகளை ஈன்ற தாய் தமிழ்


UPDATED : டிச 22, 2020 12:00 AM

ADDED : டிச 22, 2020 12:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2020 12:00 AM ADDED : டிச 22, 2020 12:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'&'தமிழ், 31 மொழிகளை ஈன்ற தாயாக, தனித்தன்மையுடன் விளங்குகிறது,&'&' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் பேசினார்.
வேலுார் செந்தமிழ் திருத்தேர் அமைப்பு, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் சார்பில், &'துாய தமிழ் பயிலரங்கின் நிறைவு விழா, சென்னையில் நடந்தது. 
அதில், அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:

பழந்தமிழ் சொற்களை புதுப்பித்து பயன்படுத்துவதில், இளம் தலைமுறையினர் கவனம் செலுத்த வேண்டும். அது, மொழியின் சொற்பரப்பை சுருக்கிவிடக்கூடாது.
இளைஞர்கள், &'கெத்து&' என்ற, பழந்தமிழ் சொல்லை மீட்டுருவாக்கியதால், தற்போது புழக்கத்தில் உள்ளது. அதேபோல, வட்டார மொழிச் சொற்களை அனைவரும் பயன்படுத்தும் சொல்லாக்க முயற்சிக்க வேண்டும்.
சிந்து மாகாணத்தில் இருந்து, கன்னியாகுமரி வரை புழங்கப்படும், 31 மொழிகளுக்கு, தமிழ் தான் தாயாக இருந்துள்ளது. இதை, ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு, புதிய கலைச் சொற்களை உருவாக்கும் சொற்குவை திட்டமும், பழந்தமிழரின் வாழ்வியல் அடையாளங்களை தேடிக் கண்டறியும் அகழாய்வுகளும், நாணயத்தின் இரு பக்கங்களை போல, தமிழுக்கு உயிர் கொடுக்கும் திட்டங்களாக செயல்படுகின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குனர் தங்க.காமராசு, தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், மாணவ - மாணவியர், தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us