UPDATED : ஜன 01, 2021 12:00 AM
ADDED : ஜன 01, 2021 12:25 PM
அ நிறம் | அளவு
சென்னை: கல்லுாரிகளுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, மாநில அரசு சார்பில், மாதம், 5,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவி தொகையை பெற, 2020 ஜன., முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், முழு நேரப் படிப்பில் சேர்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்களை, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
