UPDATED : ஜன 03, 2021 12:00 AM
ADDED : ஜன 03, 2021 07:57 AM
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி வளாகத்தில், இன்டக்ரா சாப்ட்வேர் சர்வீஸ் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில், இன்டக்ரா நிறுவன மனித வளத் துறை மேலாளர் ரிஷி, மனித வளதுறை அதிகாரி உமா ஆகியோர், நிறுவனத்தின் விபரங்கள், வேலை செய்வதற்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் குறித்து விளக்கினர். மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலாளர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கினர். முகாமை கல்லுாரி முதல்வர் மலர்கண் துவக்கி வைத்தார்.
மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் இருந்து 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.
