தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய சித்தா ஆராய்ச்சி மையம்: திருவள்ளூரில் அமைக்க திட்டம்

தேசிய சித்தா ஆராய்ச்சி மையம்: திருவள்ளூரில் அமைக்க திட்டம்

தேசிய சித்தா ஆராய்ச்சி மையம்: திருவள்ளூரில் அமைக்க திட்டம்


UPDATED : ஜன 03, 2021 12:00 AM

ADDED : ஜன 03, 2021 08:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 03, 2021 12:00 AM ADDED : ஜன 03, 2021 08:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை வளாகத்தில், நான்காவது உலக சித்தர் நாள் தினம், நேற்று கொண்டாடப்பட்டது. இதில், நிகழ்ச்சிக்கான செய்தி மலரை, சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். பின், கொரோனா தொற்றால் குணமடைந்த பின் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு, சிகிச்சை அளிக்கும் வகையில், &'சித்தர் காயகற்பம்&' பிரிவை துவக்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:


இந்தியாவில் பாரம்பரிய மருத்துவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகத்திய முனிவர் பிறந்த நட்சத்திரத்தை வைத்து, தமிழகத்தில், சித்தர் நாள் கொண்டாடப்படுகிறது. கொரோனா காலத்தில், சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில், சிறந்த பங்கை அளித்து வருகிறது.
எனவே, தேசிய சித்தா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை, தமிழகத்தில் அமைக்க, முதல்வர் பழனிசாமி., மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு அனுமதி அளித்தால், சென்னை அருகில், திருவள்ளூர் மாவட்டத்தில், ஆராய்ச்சி நிறுவனம் அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், இணை இயக்குனர் பார்த்திபன், மாநில உரிமை வழங்கல் அலுவலர் பிச்சையகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us