தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேரளாவில் கல்லூரிகள், பல்கலை திறப்பு

கேரளாவில் கல்லூரிகள், பல்கலை திறப்பு

கேரளாவில் கல்லூரிகள், பல்கலை திறப்பு


UPDATED : ஜன 05, 2021 12:00 AM

ADDED : ஜன 05, 2021 07:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2021 12:00 AM ADDED : ஜன 05, 2021 07:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்:
கேரளாவில் ஜன.,4 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன.
கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஜூன் 1-ம் தேதி முதல் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோல கல்லூரிகள், தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் ஜனவரி 4ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று முதல் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகள், சட்டம், இசை, நுண்கலை, பாலிடெக்னிக் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக இளங்கலையில் இறுதியாண்டு மாணவர்கள், முதுகலையில் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுபோல பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்குகின்றன.
சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் உண்டு. அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலை.,கள் காலை 8:30 முதல் மாலை 5 மணிவரை செயல்பட வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 5 மணிநேர வகுப்பு மட்டுமே. தேவைப்பட்டால் 2 ஷிப்ட்களாக பிரித்து வகுப்புகளை நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டன, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us