தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் மூடுவிழா

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் மூடுவிழா

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் மூடுவிழா


UPDATED : ஜன 05, 2021 12:00 AM

ADDED : ஜன 05, 2021 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2021 12:00 AM ADDED : ஜன 05, 2021 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 1986 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலை பண்பாட்டுதுறையின் கீழ் செயல்படும் இந்நிறுவனம், மாநிலத்தில் உள்ள கவிஞர்கள், மானிடவியல், இலக்கியம், பண்பாட்டு தளங்களை ஆய்வு செய்து, ஆவணப் படுத்துவதை முக்கிய இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறது. மேலும், எம்.பில்., பிஎச்.டி., படிப்புகளையும், ஆய்வாளர்களுக்கு பட்டங்களை வழங்கி வருகிறது. அதனுடன்,பிற மாநிலத்தவர் மற்றும் நாட்டினருக்கு தமிழ் கற்பிக்கப்படுகிறது.
இலக்கியம், மொழியியல், பண்பாட்டு இயல் என மூன்று துறைகளை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 12 பேராசிரியர்கள் பணியாற்றி வந்ததிலையில், தற்போது மூன்று பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் இந்தாண்டு ஓய்வு பெற உள்ளதால், நிறுவனம் மூடுவிழாவை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மொழியியல் பண்பாட்டு நிறுவனத்திற்கு பிஎச்.டி., படிப்பில் ஒரு மாணவர்கள் கூட சேர்க்கவில்லை. பேராசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு பணியாண்டுகள் இருந்தால் மட்டுமே பிஎச்.டி., வழிகாட்ட ஒப்புதல் கிடைக்கும். சில மாதங்களில் ஓய்வு பெறும் பேராசிரியர்கள் பிஎச்.டி.,க்கு வழிகாட்ட முடியாது என இந்தாண்டு தஞ்சை பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது.
இது பிஎச்.டி.,யை எதிர்பார்த்திருந்த ஆய்வு மாணவர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12 இணை பேராசிரியர்கள் பணியில் இருக்கும்போது தலா 6 மாணவர்கள் வீதம் 72 பேருக்கு பிஎச்.டி., படிப்பில் வழிகாட்ட முடியும். தற்போது, 7 மாணவர்கள் மட்டுமே பிஎச்.டி., ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். எம்.பில்., படிப்பை பொருத்தவரை 12 இணை பேராசிரியர்கள் இருந்தால் 24 மாணவர்கள் எம்.பில்., படிக்கலாம். இப்போது 6 மாணவர்கள் மட்டுமே எம்.பில்., படிக்கின்றனர். இந்தாண்டோடு எஞ்சியுள்ள மூன்று இணை பேராசிரியர்களும் ஓய்வு பெற உள்ளதால், இந்த மாணவர்களுக்கு யார் வழிகாட்டுவார்கள் என கேள்வி எழுந்துள்ளது.
இதேநிலை நீடித்தால், சில மாதங்களில் ஆசிரியர்களே இல்லாத நிறுவனம் என்ற அவப்பெயரை பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிலையம் சொசைட்டியாக தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய தேர்வாணையம் வரை கோப்பு அனுப்பி காலி இடங்களை நிரப்ப தேவையில்லை.மாநில அரசே முடிவு செய்து, பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிவிடலாம். ஆனால் காலியிடங்களை நிரப்புவதற்காக கோப்பு அனுப்பியும் இன்னும் முடிவெடுக்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் தமிழில் எம்.பில்., பிஎச்.டி., ஆய்வு படிப்பை முடித்துவிட்டு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ளூர் பேராசிரியர்களை கொண்டே நேர்காணலை நடத்த வேண்டும்.அதில் தகுதியான பேராசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் தமிழக அளவில் அந்தந்த துறைகளில் பேராசிரியர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நிரப்பலாம். மாநில அரசு இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us