தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்: முதல்வர்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்: முதல்வர்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்: முதல்வர்


UPDATED : ஜன 07, 2021 12:00 AM

ADDED : ஜன 07, 2021 07:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2021 12:00 AM ADDED : ஜன 07, 2021 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி;
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கான கல்வி நிதி முழுவதையும் ஏற்கும் திட்டத்தை அரசு கொண்டு வர உள்ளது என முதல்வர் நாராயணசாமி பேசினார்.
ஏனாமில் பல்வேறு விழாக்களில் பங்கேற்க சென்ற முதல்வர் நாராயணசாமிக்கு மண்டல நிர்வாக அலுவலகத்தில் போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது. 
குரியம்பேட்டில் ஜூனியர் கல்லுாரி, தரியலதப்பாவில் புறக்காவல் நிலையம், மத்திய சமையல் கூடம், அம்பேத்கர் அறிவு சார் மையத்தை திறந்து வைத்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
ஏனாமில் அம்பேத்கர் அறிவு மையம், சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி, உயர்கல்வி பயிற்சி மையமாகவும் இருக்கிறது. புதுச்சேரி காமராஜர் மணி மண்டபமும் இதே போல் வசதிகளை கொண்டு அமைக்கப்படும். ஏனாமில் வெள்ள தடுப்புப்சுவர், திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், செயல்படுத்த போராடினோம். தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 
எல்.கே.ஜி., முதல் ஆராய்ச்சி படிப்புவரை ஏழை எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை முழுவதையும் ஏற்கும் திட்டத்தை இந்தியாவிலேயே புதுச்சேரி அரசு தான் முதன்முறையாக கொண்டு வந்தது.ஏனாமில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி பெற நினைக்கிறோம். அனைத்து ஏழை மாணவர்களுக்கும் இலவச கல்வி தருவதே அரசின் நோக்கம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கான கல்வி நிதி முழுவதையும் அரசு ஏற்கும் திட்டத்தை கொண்டு வர உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., காங்.,எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், லட்சுமி நாராயணன், ஜான்குமார், கீதா ஆனந்தன், விஜயவேணி, பா.ஜ.,எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us