மாணவர் காவல் படையின் அப்டேட்: மத்திய உள்த்துறை அமைச்சகம்
மாணவர் காவல் படையின் அப்டேட்: மத்திய உள்த்துறை அமைச்சகம்
UPDATED : ஜன 07, 2021 12:00 AM
ADDED : ஜன 07, 2021 07:07 PM
புதுச்சேரி;
புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் மாணவர் காவல் படையின் &'அப்டேட்&' தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
நாட்டில் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்த, பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வு, நற்சிந்தனை வளர்க்க மாணவர் காவல் திட்டம் ஆரம்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. புதுச்சேரியில் காவல் துறை, கல்வித் துறை இணைந்து, மாணவர் காவல் திட்டத்தை பள்ளிகளில் துவக்கி, செயல்படுத்துகின்றன. இதில், 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இப்படையில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு, சமூகத் தீமைகளுக்கு எதிராகப் பணிபுரிதல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற மாணவ மாணவியர், காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர் காவல் படையின் தற்போதைய போக்கு, பயிற்சி விதம் உள்ளிட்ட அப்டேட் தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம், புதுச்சேரி காவல் துறையிடம் கேட்டுள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடமிருந்து மாணவர் படையின் தகவல்களை காவல் துறை தலைமையகம் திரட்டி வருகிறது.
