தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை எம்.டெக்., சேர்க்கை நடக்குமா?

அண்ணா பல்கலை எம்.டெக்., சேர்க்கை நடக்குமா?

அண்ணா பல்கலை எம்.டெக்., சேர்க்கை நடக்குமா?


UPDATED : ஜன 07, 2021 12:00 AM

ADDED : ஜன 07, 2021 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2021 12:00 AM ADDED : ஜன 07, 2021 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா பல்கலையில் எம்.டெக்., படிப்புகளில் சில பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தாததால் மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.
இப்பல்கலையில் எம்.டெக்., பயோ டெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷன் பயாலஜி படிப்புக்கு 2020-- 2021 மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு 2020 அக்.,ல் வெளியிடப்பட்டது. &'டான்செட்&' மற்றும் மத்திய அரசின் &'கேட்&' மற்றும் &'கேட்- பி&' நுழைவு தேர்வுகளில் அகில இந்திய ரேங்க் பெற்ற 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
ரேங்க் பட்டியலில் முதல் 30 இடங்களுக்கும் மேல் மதுரை, சென்னை, சேலத்தை சேர்ந்த மாணவர் உள்ளனர். இதுவரை இவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மதுரை மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

எம்.டெக்., பயோ டெக்னாலஜியில் 25, கம்ப்யூடேஷன் பயோ டெக்., படிப்பில் 20 என 45 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. கலந்தாய்வுக்கும் அழைக்கப்படவில்லை. எதிர்காலம் பாதித்துள்ளது. பல்கலையில் பலமுறை விளக்கம் கேட்டும் பதில் கிடைக்க வில்லை. அதிகாரிகளின் மெத்தனத்தால் 45 இடங்கள் வீணடிக்கப்பட்டதா. பதிவாளர் விளக்கம் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us