UPDATED : ஜன 15, 2021 12:00 AM
ADDED : ஜன 15, 2021 10:09 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி;
புதுச்சேரி மாநில யோகா ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம், வெண்ணிலா நகர் சங்க அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார். துணை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் யோகாவை இந்திய விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக அங்கீகரித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள யோகா ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி, அனுபவம் வாய்ந்த யோகா ஆசிரியர்களை பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆலோசகர் ஞானவேல் நன்றி கூறினார்.
