நுாலகத்தில் அடிப்படை வசதி செய்து தர கலெக்டரிடம் மனு
நுாலகத்தில் அடிப்படை வசதி செய்து தர கலெக்டரிடம் மனு
UPDATED : ஜன 18, 2021 12:00 AM
ADDED : ஜன 18, 2021 08:55 AM
காரைக்கால்:
காரைக்காலில் நுாலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வாசகர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட நுாலக வாசகர் சங்கம் சார்பில் கலெக்டர் அர்ஜூன் சர்மாவிடம் சங்கத் தலைவர் புத்திசிகாமணி, துணைத் தலைவர் தங்கவேல், செயலாளர் கமலேஷ், கிளைச் செயலாளர் திவ்யதாஸ் ஆகியோர் அளித்த மனு:
பொது நுாலகத்தின் வேலை நேரத்தை முன்பு இருந்தது போல் காலை 9 முதல் 7 மணி வரை மாற்றியமைக்க வேண்டும். நுாலகத்தில் கழிப்பறை வசதிகள், வாசகர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும். நுாலகத்தில் வாரம் இரு முறை மாத இதழ்கள் அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட் டிருந்த மாதா கோவில் வீதி நுாலகம் பராமரிப்பு பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
