தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா

மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா

மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா


UPDATED : ஜன 21, 2021 12:00 AM

ADDED : ஜன 21, 2021 06:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2021 12:00 AM ADDED : ஜன 21, 2021 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி;
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதுார கல்வித்துறை இயக்குனர் ராமய்யா, உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் அருள் வாழ்த்தி பேசினர். கல்லுாரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கல்லுாரி செயலாளர் டாக்டர் நாராயணசாமி பேசுகையில், &'கலை மற்றும் அறிவியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு தொழில் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை தாண்டி செயல்திறன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்&' என கூறினார். 
கல்லுாரி மேலாண் இயக்குனர் தனசேகரன் பேசுகையில், &'மாணவர்கள் பாடத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், செய்முறை திறனிலும் அதிக கவனம் செலுத்தி முதன்மை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும், உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள வாய்ப்புகள், போட்டித் தேர்வுகளில் முதன்மை பெற வேண்டும் என குறிப்பிட்டார்.
கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு கல்லுாரி டீன் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us