UPDATED : ஜன 21, 2021 12:00 AM
ADDED : ஜன 21, 2021 06:30 AM
கோவை:
வடகிழக்கு பருவமழை சேத கணக்கீடு பணிகளை தமிழக அரசு துவங்கியுள்ள நிலையில், அதற்கு தேவையான உதவிகளை செய்ய வேளாண் பல்கலை தயாராக உள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்களில் சேதம் ஏற்பட்டது. இதை மத்தியகுழு பார்வையிட்டு, மதிப்பீடு செய்தது. இந்நிலையில், தமிழகஅரசு, எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து வேளாண், தோட்டத்துறை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளை கொண்டு மேற்கொண்டு வருகிறது.
வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் கூறுகையில், &'&'தமிழக அரசு சேதக்கணக்கீடு பணி மேற்கொண்டுள்ளது. அதற்குத்தேவையான உதவி மற்றும்மதிப்பீடு செய்ய எங்களுக்கு அறிவுறுத்தினால், நாங்கள்&'ட்ரோன்&' மற்றும் &'ரிமோட் சென்சார்&' கருவிகளை கொண்டு, பணிகளை நிறைவு செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம்,&'&' என்றார்.
