தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒருங்கிணைந்த மருத்துவம் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு

ஒருங்கிணைந்த மருத்துவம் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு

ஒருங்கிணைந்த மருத்துவம் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு


UPDATED : ஜன 23, 2021 12:00 AM

ADDED : ஜன 23, 2021 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2021 12:00 AM ADDED : ஜன 23, 2021 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அலோபதி - ஆயுஷ் மருத்துவ முறைகளை, ஒன்றாக இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுதும், டாக்டர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம். சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி ஆகிய ஆயுஷ் மருத்துவ முறைகள் மற்றும் அலோபதி மருத்துவம் ஆகியவற்றை, ஒன்றாக இணைப்பது என்ற அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு, அலோபதி டாக்டர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தகட்டமாக வரும், பிப்., 1 முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் கூறியதாவது: 

அலோபதி - ஆயுஷ் மருத்துவத்தை இணைத்து, ஒரே கலவையாக கொண்டு வரும் முடிவை கைவிட வேண்டும். ஆயுர்வேத டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற, அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் கலவை மருத்துவத்தால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
முறையான பயிற்சி இல்லாமல், ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால், நோயாளிகள் கடும் பாதிப்பை சந்திப்பர்.இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 1ம் தேதி முதல், நாடு முழுவதும், தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறோம். தமிழகத்தில், நான்கு இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 50 இடங்களில் நடைபெறும். ஒவ்வொரு இடத்திலும், 20 டாக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us