தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிஜிட்டல் மயமாகும் பள்ளி அங்கீகாரம்: சி.பி.எஸ்.இ., திட்டம்

டிஜிட்டல் மயமாகும் பள்ளி அங்கீகாரம்: சி.பி.எஸ்.இ., திட்டம்

டிஜிட்டல் மயமாகும் பள்ளி அங்கீகாரம்: சி.பி.எஸ்.இ., திட்டம்


UPDATED : ஜன 25, 2021 12:00 AM

ADDED : ஜன 25, 2021 08:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2021 12:00 AM ADDED : ஜன 25, 2021 08:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின்கீழ், நாடு முழுதும், 24 ஆயிரத்து, 930 பள்ளிகள் பதிவு செய்துள்ளன. இவற்றில், இரண்டு கோடி மாணவர்கள் படிக்கின்றனர். மொத்தம், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 
பள்ளிகளுக்கான அங்கீகாரம் குறித்து, சி.பி.எஸ்.இ., செயலர் அனுராக் திரிபாதி கூறியுள்ளதாவது:

பள்ளிகளுக்கான அங்கீகாரம் பெறுவது உள்ளிட்டற்றுக்கு, &'ஆன்லைன்&' மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறையை, 2006ல் அறிமுகம் செய்துள்ளோம். தற்போது, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கைகள் அனைத்தும், டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. அதாவது விண்ணப்பத்தை பரிசீலித்து, அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளில், மனித தலையீடு மிகவும் குறைவாகவே இருக்கும்.குறைந்த அரசு தலையீடு, அதிக நிர்வாகம் என்ற மத்திய அரசின் கொள்கைப்படி, இந்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பங்கள் அளிப்பதற்கான காலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் கோரி புதிய பள்ளிகள் விண்ணப்பித்தது, தரம் உயர்த்துவதற்கு மூன்று முறை அவகாசம் அளிக்கப்படும். அங்கீகாரத்தை நீட்டிக்க, மார்ச், 1 - மே, 31 வரை விண்ணப்பிக்கலாம். மற்ற சேவைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us