UPDATED : ஜன 26, 2021 12:00 AM
ADDED : ஜன 26, 2021 08:15 PM
ஒரு விரல் புரட்சி
இந்தியாவின் 72வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி. தேர்தல் மூலம் தங்களுக்கு விருப்பமான தலைவர்களை தேர்ந்தெடுத்து, மக்களே ஆட்சி நடத்துவது தான் குடியரசு. எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது அரசியலமைப்புச் சட்டம். இது அமலுக்கு வந்த ஜன.26, குடியரசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்துபவர்களே உண்மையான குடிமகன்கள். இது ஒவ்வொருவரின் கடமை. அனைவரும் தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்தால் தான், உன்மையான மக்களாட்சி மலரும்.
1955
குடியரசு தின அணிவகுப்பு 1955ல் முதன்முதலில் ராஜ்பாத்தில் நடந்தது. அதற்கு முன் தேசிய மைதானம், செங்கோட்டை, ராம்லீலா பகுதிகளில் நடந்தன.
1935
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்குமுன் பிரிட்டிஷார் இயற்றிய &'இந்திய அரசு சட்டம் - 1935&' அமலில் இருந்தது. இதிலிருந்தும் சில நமது சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
21
குடியரசு தினத்தில் ஜனாதிபதி கொடி ஏற்றும் போது பாதுகாப்பு வீரர்கள் 21 குண்டுகளை முழங்க செய்வர். முதல் குடியரசு தினத்தில் மட்டும் 31 குண்டுகள் முழங்கப்பட்டன.
சட்டம் உருவானது எப்படி
* 1946 டிச.6: அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
* டிச.9: தற்காலிக தலைவர் சச்சிதானந்த சின்ஹா தலைமையில் முதன்முறை கூடியது.
* டிச. 11: ராஜேந்திர பிரசாத் தலைவரானார்.
* 1947 ஆக.29: அம்பேத்கர் தலைமையில்
6 உறுப்பினர்களுடன் சட்ட வரைவுக்குழு அமைக்கப்பட்டது.
* 1949 நவ.26: பல ஆய்வுகள், திருத்தங்களுக்குப் பின் வரைவுக்குழு தயாரித்த சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றது.
* 1950 ஜன.24: நிர்ணய சபையின் 284 உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
* சட்டம் உருவாக 2 ஆண்டு, 11 மாதம், 18 நாட்கள் ஆனது.* ஜன. 26: அரசியலமைப்பு சட்டம் அமல்.
நான்காவது பெரியது
இந்திய ராணுவ வலிமையை உலகிற்கு குடியரசு தினம் உணர்த்துகிறது. இந்த ஆண்டு ரபேல் போர் விமானத்தின் வருகை, ரூ.48 ஆயிரம் கோடியில் 83 &'தேஜஸ் மார்க் 1&' போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் போன்றவை ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்தியுள்ளது. உலகின் சக்திவாய்ந்த ராணுவத்தில் இந்தியாவுக்கு 4 வது இடம்.
மொத்த ராணுவ வீரர் 26 லட்சம்
மொத்த விமானம் 2119
போர் விமானம் 542
ஹெலிகாப்டர் 775
தாக்குதல் ஹெலிகாப்டர் 37
பீரங்கி டாங்கி 4730
தானியங்கி டாங்கி 100
ராக்கெட் புரொஜெக்டர்ஸ் 374
மொத்த போர்க்கப்பல் 285
தாக்குதல் கப்பல் 10
விமானம் தாங்கி கப்பல் 1
நீர்மூழ்கி கப்பல் 17
ரோந்து கப்பல் 139
எல்லையின் நீளம் 13,888 கி.மீ.
ஜனாதிபதி பதவி
1947 ஆக.15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கியது. &'டொமினியன் அந்தஸ்து&' என்பது பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. அதன்படி அவர்கள் நியமித்த கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். பின்அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜன.26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிஷாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு ஜனாதிபதி பதவி உருவானது.
ஜன.26 &'ரகசியம்&'
லாகூரில் 1929 டிச.21ல் நடந்த காங்., மாநாட்டில், 1930 ஜன.26ல் &'பூரண சுயராஜ்ய தினம்&' கொண்டாட வேண்டும் என தீர்மானித்தனர். &'பூரண சுயராஜ்யம்&' என்றால் முழுமையான சுதந்திரம் என அர்த்தம். மகாத்மா காந்தியின் வேண்டுகோளின்படி அன்றைய தினம் மக்கள் சுதந்திரதினத்தை கொண் டாடினர். சுதந்திரம் பெற்ற பின், இத்தினத்திலேயே குடியரசு தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
80 ஆயிரம்
ஆங்கிலம், ஹிந்தியில் எழுதப்பட்ட உலகின் நீளமான (80 ஆயிரம் வார்த்தை) அரசியல் அமைப்பு சட்டத்தை கொண்டது இந்தியா. இதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசு, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இயங்குகின்றன
11
அரசியலமைப்பு சட்டத்தில் மக்களுக்கு 11 அடிப்படை கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
13
குடியரசு தின விழாவில் அதிகமுறை (13) பங்கேற்ற ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத். குறைந்தமுறை (2) பங்கேற்றவர் ஜாகிர் உசேன்.
104
அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த போது, ஒரு முன்னுரை, 22 பகுதி, 395 விதி, 8 அட்டவணை இருந்தன. தற்போது ஒரு முன்னுரை, 25 பகுதி, 465 விதி, 12 அட்டவணை உள்ளன. இதுவரை 104 சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
இன்று 72வது குடியரசு தினம்
குடியரசு தின விழா மூன்று நாட்கள் நடக்கும். ஜனாதிபதி கொடியேற்றுவதுடன் தொடங்கும் விழா, ஜன.29ல் முப்படை வீரர்கள் பாசறை திரும்புதலுடன் நிறைவடையும்.
3 1950 ஜன.26 காலை 10:38 மணிக்கு குடியரசு நாடானது இந்தியா. அதற்கு முன் 10:24 மணிக்கு ஜனாதிபதியாக ராஜேந்திரபிரசாத் பதவியேற்றார்.
24 வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய இந்திய தேசிய கீதம் &'ஜன கண மன...&' 1950 ஜன.24ல் அமல்.
4 கொரோனா அச்சத்தால் சிறப்பு விருந்தினர் பங்கேற்கவில்லை. இதுபோல 19௫௨, 1953, 19௬௬ல் பங்கேற்கவில்லை.
6 அரசியலமைப்பில் சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய உரிமை, கல்வி, பண்பாட்டு உரிமை, அரசியலமைப்பு பரிகார உரிமை, சொத்துரிமை என ௭ அடிப்படை உரிமை இருந்தன. 1978ல் 44வது சட்டத் திருத்தம் மூலம் சொத்துரிமை நீக்கம்.
