தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலை பணி நியமன முறைகேடு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை காமராஜ் பல்கலை பணி நியமன முறைகேடு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை காமராஜ் பல்கலை பணி நியமன முறைகேடு: உயர்நீதிமன்றம் உத்தரவு


UPDATED : ஜன 30, 2021 12:00 AM

ADDED : ஜன 30, 2021 09:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2021 12:00 AM ADDED : ஜன 30, 2021 09:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 மதுரை காமராஜ் பல்கலையில் சட்டவிரோத பணி நியமனம் தொடர்பாக விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கையில் யார், யாருக்கு எதிராக குறிப்புகள் இடம் பெற்றுள்ளதோ, அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
மதுரை மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயலாளர் லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக 2017 மே முதல் 2018 ஜூன் வரை செல்லத்துரை பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் விதிகளைப் பின்பற்றாமல், எவ்வித அறிவிப்பும் செய்யாமல் அலுவலக கண்காணிப்பாளர்கள், அலுவலக உதவியாளர்களாக சிலர் நியமிக்கப்பட்டனர்.
இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. பல்கலை உறுப்புக் கல்லுாரிகளில் கவுரவ விரிவுரை யாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கு பல்கலை சிண்டிகேட்டின் ஒப்புதல் பெறவில்லை. இத்தகைய விதிமீறல்கள் குறித்து 2017-18 பல்கலை தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தகுதியற்ற ஆசிரியர்களுக்கு பேராசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. முறைகேடுகள், விதிமீறல்கள் குறித்து நடவடிக்கைகோரி பல்கலை பாதுகாப்புக்குழு சார்பில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், கவனர்னரின் செய லாளரிடம் புகார் அளிக்கப் பட்டது. துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. செல்லத்துரை துணைவேந்தராக பதவி வகித்த காலகட்டத்தில் பணிநியமனம், பதவி உயர்வில் விதிமீறல்கள் குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது.அக்குழு 2019 நவ.,5 ல் தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.
36 இணைப் பேராசிரியர்கள் பேராசிரியர்களாகவும், 4 உதவி பேராசிரியர்கள் இணைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டதில் குறைபாடுகள் உள்ளது; பல்கலை மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) விதிமுறைகளை பின்பற்றவில்லை என உயர்நிலைக்குழு முடிவுக்கு வந்துள்ளது. குழுவின் அறிக்கை மீது 14 மாதங்களாக நடவடிக்கை இல்லை. குழுவின் அறிக்கை பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சட்டவிரோதமாக பல்கலையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்/பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பதவி உயர்வு அளிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு லயோனல் அந்தோணிராஜ் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு: 

உயர்நிலைக்குழு அறிக்கையில் யார், யாருக்கு எதிராக குறிப்புகள் இடம் பெற்றுள்ளதோ, அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், கவர்னரின் செயலாளர், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி பிப்.,12 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us