UPDATED : ஜன 31, 2021 12:00 AM
ADDED : ஜன 31, 2021 10:12 PM
புதுச்சேரி;
லாஸ்பேட்டை காஞ்சிமாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி நிறுவனத்தில், பேராசிரியர் பஞ்சாங்கம் நிறுவிய கனியப்பன் முத்தமாள் அறக்கட்டளை துவக்க விழா நடந்தது.
தமிழ்த்துறை தலைவர் நிர்மலா வரவேற்றார். சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் பஞ்சாங்கம் நோக்கவுரையாற்றினார். பட்ட மேற் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சங்கரராஜி முன்னிலை வகித்தார்.அறக்கட்டளையை கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் துவக்கி வைத்து பேசினார். தமிழ்த்துறையின் முதல் செய்தி மடல் வெளியிடப்பட்டது.
வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் பக்தவச்சல பாரதி முதல் சொற்பொழிவாற்றினார். தமிழ்த் துறை பேராசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் குழந்தைசாமி, கிருஷ்ணகுமார், சுஜாதா, வேல் கார்த்திகேயன் செய்திருந்தனர்.
