தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழறிஞர்கள் 77 பேருக்கு விருது: முதல்வர் பாராட்டு

தமிழறிஞர்கள் 77 பேருக்கு விருது: முதல்வர் பாராட்டு

தமிழறிஞர்கள் 77 பேருக்கு விருது: முதல்வர் பாராட்டு


UPDATED : பிப் 02, 2021 12:00 AM

ADDED : பிப் 02, 2021 09:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2021 12:00 AM ADDED : பிப் 02, 2021 09:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சி; தமிழ் சமுதாய உய, 77 பேருக்கு, பல்வேறு விருதுகளை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வழங்கி பாராட்டினார்.
திருவள்ளுவர் திருநாள் விருதுகளாக, 2021ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்; 2020ம் ஆண்டிற்கான, தந்தை பெரியார் விருது, அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் தமிழ் மகன் உசேன்; தமிழ்தென்றல் திரு.வி.க., விருது, பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கும் வழங்கப்பட்டது.
கம்பர் விருது, முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே; சொல்லின் செல்வர் விருது, நாகை முகுந்தன்; காரைக்கால் அம்மையார் விருது, முனைவர் ஞானப்பூங்கோதை ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 1 சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., வழங்கி பாராட்டினார்.
கடந்த ஆண்டுக்கான, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை, குருநாதன், குணசேகர், பத்மாவதி விவேகானந்தன், ஜோதிர்லதா கிரிஜா, ராமகிருட்டிணன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டி பிரசாத், சேசாச்சலம் சார்பில், அவரது மகன் கோபிநாத் ஆகியோரிடம், முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார். இவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, பொன்னாடை வழங்கப்பட்டது. 
தமிழர் தந்தை விருது

கடந்த ஆண்டுக்கான, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நாளிதழ் விருது, &'தினமணி&' நாளிதழ் மேலாண்மை இயக்குனர் சித்தார்த், ஆசிரியர் வைத்தியநாதன்; வார இதழ் விருது, கல்கி வார இதழ் கல்வி பொறுப்பாசிரியர் ரமணன்; திங்களிதழ் விருது, செந்தமிழ் திங்களிதழ் ஆசிரியர் சதாசிவம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. மொத்தம், 77 பேருக்கு, பல்வேறு விருதுகளை, முதல்வர் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜு, ராஜலட்சுமி, பாண்டியராஜன், வளர்மதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us