UPDATED : பிப் 03, 2021 12:00 AM
ADDED : பிப் 03, 2021 10:38 AM
கொரோனா ஊரடங்கு காரணமாக, நாடு முழுதும் உள்ள பள்ளிகள், கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் மூடப்பட்டன.
செய்முறை தேர்வுகள்
&'ஆன்லைன்&' வாயிலாக, வகுப்புகள் நடத்தப் பட்டு வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்தில் செயல்படும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், கடந்த மாதம், 25ல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த வகுப்புகளுக்கான நடப்பாண்டு பொதுத் தேர்வு தேதிகளை, மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.
இது குறித்து, வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வுகள், வரும், மே, 4ல் துவங்கி, ஜூன், 7ல் முடிவடைகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மே, 4ல் துவங்கி, ஜூன், 11ல் முடிவடைகின்றன. செய்முறை தேர்வுகள், மார்ச், 1ல் துவங்குகின்றன.
இரண்டு வேளை
அனைத்து தேர்வுகளும், காலை, 10:30 முதல், மதியம், 1:30 மணி வரை நடைபெறும். பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும், நான்கு தேர்வுகள், காலை - மதியம் என, இரண்டு வேளையாக பிரித்து நடத்தப்பட உள்ளன. மதியம் நடக்கும் தேர்வுகள், 2:30 மணிக்கு துவங்கி, மாலை, 5:30 மணிக்கு முடிவடையும்.
தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில், நேரடி வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், மாணவர்கள் நலன் கருதி, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட திட்டங்களில், 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
