தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த ஆய்வு நூலுக்கு பரிசு வழங்கும் விழா

சிறந்த ஆய்வு நூலுக்கு பரிசு வழங்கும் விழா

சிறந்த ஆய்வு நூலுக்கு பரிசு வழங்கும் விழா


UPDATED : பிப் 04, 2021 12:00 AM

ADDED : பிப் 04, 2021 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2021 12:00 AM ADDED : பிப் 04, 2021 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி பஞ்சு பரிசில் குழு சார்பில், சிறந்த ஆய்வு நுாலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜமாலன் எழுதிய &'உடலரசியல்&' நுாலுக்கு பரிசு வழங்கும் விழா, மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன தொல்காப்பியர் அரங்கத்தில் நாளை நடக்கிறது.
மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சம்பத் வரவேற்கிறார். பாலுசாமி தலைமை தாங்கி, பரிசில் பெற்ற உடலரசியல் நுால் குறித்து பேசுகிறார். சீனு தமிழ்மணி, பேராசிரியர் பஞ்சாங்கம், எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா வாழ்த்தி பேசுகின்றனர்.
மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் பக்தவத்சல பாரதி, பரிசு அளித்து பாராட்டி பேசுகிறார். பேராசிரியர் வெங்கடசுப்பராய நாயகர், சென்னை காலக்குறி பதிப்பகம் கான் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இலக்கியமும், கோட்பாட்டின் தேவையும் என்ற தலைப்பில் ஜமாலன் ஏற்புரை வழங்குகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us