தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுமா? கல்லூரி மாணவர்கள் எதிர்பார்ப்பு

பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுமா? கல்லூரி மாணவர்கள் எதிர்பார்ப்பு

பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுமா? கல்லூரி மாணவர்கள் எதிர்பார்ப்பு


UPDATED : பிப் 06, 2021 12:00 AM

ADDED : பிப் 06, 2021 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2021 12:00 AM ADDED : பிப் 06, 2021 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து, நிபந்தனைகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடலுார் வழியாக இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதில், ரயில் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து துவங்கி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
ஆனால், அதே மாதம் 29ம் தேதி நிறுத்தப்பட்டன. அதையடுத்து, செப்டம்பர் 7 ம் தேதி முதல் தமிழகத்தில் முக்கிய வழித் தடங்களில் மட்டும் ஒரு சில ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில், சென்னையில் இருந்து கடலுார் வழியாக திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் முதல் முதலாக இயக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உழவன், திருச்செந்துார், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால், விழுப்புரத்தில் இருந்து கடலுார் வழியாக இயக்கப்பட்ட பயணிகள் ரயில் மற்றும் திருச்சியில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் வரை இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இந்த ரயில்களால் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது.
முக்கியமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பூம்புகார், மயிலாடுதுறை, விழப்புரம், கடலுார் உள்ளிட்ட பகுதி கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கல்லுாரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.
மீண்டும் சகஜ நிலை திரும்பியுள்ளதால், விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் இயக்கப் பட்ட பயணிகள் ரயில். திருச்சி - திருப்பாதிரிப்புலியூர் வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பாசஞ்சர் ரயில்கள் இயக்குவது குறித்து இதுவரை ரயில்வே நிர்வாகம் எந்த முடிவும் அறிவிக்கவில்லை. மாநில அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு, சுகாதார துறையிடம் ஆலோசனை கேட்டு, அதுதொடர்பாக மத்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்த பிறகே ரயில் இயக்கப்படும்&' என்றனர்.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்குமா? மாவட்டத் தலைநகரான கடலுார், திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் உழவன், ராமேஸ்வரம், கம்பன், பாமினி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதில்லை. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us