தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாரத்தில் 4 நாள் வேலை; விரைவில் வருகிறது புதிய வசதி

வாரத்தில் 4 நாள் வேலை; விரைவில் வருகிறது புதிய வசதி

வாரத்தில் 4 நாள் வேலை; விரைவில் வருகிறது புதிய வசதி


UPDATED : பிப் 10, 2021 12:00 AM

ADDED : பிப் 10, 2021 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2021 12:00 AM ADDED : பிப் 10, 2021 09:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை சார்பில், தொழிலாளர் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
விடுமுறை

இதற்கான வரைவு விதிகள் தயாரிக்கும் பணி இறுதிகட்டத்தில் உள்ளது. இதன் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களும், தங்கள் தொழிலாளர் விதிகளை மாற்றி வருகின்றன.

இது குறித்து, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலர் அபூர்வா சந்திரா கூறியதாவது:

இந்த புதிய விதிகளின்படி, ஒரு வாரத்தின் வேலை நாட்களை, நான்கு நாட்களாக குறைத்து கொள்ளலாம். இதை, சுய விருப்பத்தின் அடிப்படையில், நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
அவ்வாறு நான்கு நாட்கள் வேலை நாட்களாக இருக்கையில், மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். இந்த புதிய விதிகளின்படி, நான்கு அல்லது ஐந்து அல்லது ஆறு நாட்கள், வேலைநாட்களாக இருக்கலாம். அதே நேரத்தில், ஒரு வாரத்தில், 48 மணி நேர பணி என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
அனுமதி

இது கட்டாயமில்லை; நிறுவனங்களும், தொழிலாளர்களும் முடிவு செய்து கொள்ளலாம். வார வேலைநாட்கள் மாற்றுவது தொடர்பாக, அரசின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை.இதைத் தவிர, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அமைப்பு சாராத் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கான, புதிய இணையதளம், ஜூனில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us